Monday, January 11, 2016

இலந்தைப்பழத்தின் மருத்துவக்குறிப்புகள்...



சாலையோரத்தில் மிக மலிவாக கிடைக்கும் இலந்தையில் பொதிந்துள்ள அதிசயம் காண்போம் வாரீர்...

இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

* உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

* இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

* மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

* இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.

* இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.

* வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.

* தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

* இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு.

No comments:

Post a Comment